முல்லைத்தீவு மாணவா்களுக்கு கல்விப் புலமை பரிசில் சான்றிதழ் வழங்கி வைப்பு! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட 2019/2020 கல்வி ஆண்டு மாணவர்களுக்கான "சமூர்த்தி சிப்தொர" கல்விப் புலமை பரிசில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (27.02.2020)  உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ.ச.கனகரத்தினம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக  முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.ஜெ.கணேசமூர்த்தி, கோட்டக் கல்வி அதிகாரி  சுப்பிரமணியயேஸ்வரன்,  விசுவமடு மகா வித்தியாலய அதிபர் ந.அன்ரன் குலதாஸ், உடையார்கட்டு மகாவித்தியாலய அதிபர்  ஸ்ரீதரன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்புரை ஆற்றிய ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், பிள்ளைகளின் கல்விக்காக வழங்கப்படும் இவ்வாறான உதவிகள் போற்றத்தக்கது என்றும் மேலும் இவ்வாறான உதவிகளை பெற்று மாணவர்கள் நல்லதோர் கல்வி சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் இளம் சமுதாயத்தினர் போதையற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Previous Post Next Post