இத்தாலியில் இலங்கைப் பெண்ணுக்கு கொரோனா! உறுதிப்படுத்தியது தூதரகம்!!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் இத்தாலியில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாhவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது.

இத்தாலியில் வசிக்கும் 46 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அந் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு சுகாதாரத் துறையினர் அறிவித்திருந்தனர்.

இருந்தும் குறித்த நபர் கொரோனா வைரஸினால் உயிரிழக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக இத்தாலிய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய முதலாவது இலங்கைப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post