யாழில் ஒரு இலட்சத்தைத் தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்தது தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூலை 9) வியாழக்கிழமை தூய தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. உலக அளவில், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்க விலை உயர்வு ஜூன் மற்றும் ஜூலை மாத ஆரம்பத்தில் பதிவாகியுள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டொலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கோரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில் தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.


ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூலை 9) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்) 91 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 88 ஆயிரத்து 450 ரூபாயாக காணப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு ஒரு லட்சம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை தூய தங்கம் 96 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
Previous Post Next Post