சுமந்திரன், சிறிதரன் பதவிகள் பறிக்கப்பட்டன!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் புதிய கொறடாவாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பில் நேற்று (21) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்தத் தெரிவுகள் இடம்பெற்றன.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த 5 வருடங்களாகக் கூட்டமைப்பின் பேச்சாளாராக எம்.ஏ.சுமந்திரனும், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடாவாக சி.சிறிதரனும் பதவி வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post