திருமணத்துக்காக பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழ் பெண் கைது!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
போலி ஆவணங்களை சமர்ப்பித்து பிரான்ஸ் செல்ல முயன்ற வவுனியா யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

போலியாக தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் வதிவிட விசா மூலம் கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்றிருந்தார்.

கட்டார் எயார்வேஸின் கியூஆர் -669 விமானத்தில் ஏற அவர் நேற்று அதிகாலை 3.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் சமரப்பித்த ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, குடிவரவு மற்றும் குடிவரவு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், யுவதியின் பிரெஞ்சு வதிவிட விசா போலி தகவல்களுடன் போலியாக தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.

அவர் திருமணத்திற்காக போலி விசாவில் அனுப்பப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, விமான நிலைய சிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Previous Post Next Post