பளை கோர விபத்தில் உயிரிழந்த தந்தை மற்றும் இரு பிள்ளைகள்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை உட்பட இரு சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த காருடன் , அதற்கு நேரெதிர் திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் பளை - தர்மங்கேணி பகுதியை சேர்ந்த  அழகரத்தினம் சற்குணநாதன் (வயது-38),  சற்குணநாதன் சாருஜன், சற்குணநாதன் சாரங்கன் என்ற 8 மற்றும் 16 வயதுகளை உடைய சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்கு காரணமான டிப்பர் சாரதி தப்பியோடியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை விபத்தில் உயிரிழந்த அழகரத்தினம் சற்குணநாதன் ஒரு மணல் வியாபாரி என்றும்,  அவர் வைத்திருந்து அண்மையில் விற்கப்பட்ட டிப்பர் வாகனமே அவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post