யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தருக்கு நடந்த கதி!


வேலை முடித்து வீடு திரும்பிய சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளைக் கும்பல் ஒன்றினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளது.

கோப்பாய் இராசபாதை வீதியில் இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் பட்டதாரி பயிலுநராகக் கடமையாற்றும் உத்தியோகத்தர், தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வழிமறித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவரிடம் கதைக்க முற்பட்டு பாசங்கு காண்பித்த கொள்ளையர்கள் தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post