யாழ்.கொக்குவிலில் இரு வீடுகளுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடி! (படங்கள்)

கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.Previous Post Next Post