
இந்நிலையில், புதிய பிரதமர் அடுத்த சில மணிநேரங்களில் நியமிக்கப்படுவார் என எலிசே மாளிகை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திரு.எத்துவார் பிலிப் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவரை தனது கடமையில் ஈடுபடுவார் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மாலை, செய்தி ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்தார். அதன்போது எத்துவார் பிலிப்புடனான தமது உறவு பற்றி குறிப்பிட்டிருந்தார்.
தனித்தன்மையான நம்பிக்கையின் உறவு என தெரிவித்த மக்ரோன், கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களுடைய ஒவ்வொரு பேர் சொல்லும்படியான வேலைகளில் எல்லாம் அவர் உடனிருந்திருக்கின்றார்!ஹ என தெரிவித்திருந்தார்.