நாட்டிலுள்ள பயணத் தடை நாளை அதிகாலை 4 மணிக்கு நீக்கம்! கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்!!


 
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த வியாழன் இரவு 11.00 மணி முதல் நாடு தழுவியதான சமூக முடக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே நடமாடலாம் என்ற நிலையில் இன்று மூன்றாவது நாளாக நாடு தழுவிய சமூக முடக்கல் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் முன்னர் அறிக்கப்பட்டிருந்த வகையில் நாளை திங்கட் கிழமை அதிகாலை 04.00 மணியுடன் நாடு தழுவியதான சமூக முடக்கல் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது.

அவ்வாறு நாளை அதிகாலை 04.00 மணியுடன் நாடு தழுவியதான சமூக முடக்கல் விலக்கிக் கொள்ளப்படும்பட்சத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே-31 ஆம் திகதிவரை இந்த நடைமுறை தொடரும் என காவல்துறை ஊடகப் பேச்சாளரும், காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில்,

நாளாந்தம் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும்.

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து கட்டுப்பாடு நீடிக்கும்.

அத்துடன், போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்படும் நிலையில் கடமைக்கு செல்வதை தவிர வேறு நோக்கங்களுக்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே வீட்டை விட்டு வெளியேற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது நடைமுறையில் உள்ள நாடு தழுவியதான சமூக முடக்கலை மேலும் நீடிக்குமாறு பலதரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் சமூக முடக்கல் நிலையை தொடர்வதா என்பது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு தழுவிய சமூக முடக்கல் நிலை தொடர்பான உறுதி செய்யப்பட்ட தகவல்களை அறிந்துகொள்ள அருவி இணையத்துடன் இணைந்திருங்கள்.
Previous Post Next Post