மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு சீராக்கப்பட்டது யாழ்.செங்குந்தா வீதி! (படங்கள்)


நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட செங்குந்தா வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் நீர் வழங்கல் வடிகாலமைச்சபையால் நீர்க் குழாய்கள் புதைப்பதெற்கென குறித்த வீதி வெட்டப்பட்டிருந்தது.

இருந்தும் குழாய்கள் புதைக்கப்பட்ட நிலையில் வீதி சீராகச் செப்பனிடப்படவில்லை. இதனால் அவ் வீதியால் பயணிப்பவர்கள் பெரும் அசௌசரியங்களுக்குள்ளானதுடன், விபத்துக்களையும் சந்திக்க நேர்ந்துள்ளது.

இந் நிலையில் இது குறித்து கவனம் எடுத்த நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர் தெ.கிரிதரன், சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுடன் குறித்த வீதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு குறித்த வீதியின் நிலை தொடர்பில் தெரிவித்து உடனடியாகச் செப்பனிட கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந் நிலையில் தற்போது குறித்த வீதி சீராக்கப்பட்டு மக்களின் அன்றாட பாவனைக்கு ஏற்றவாறு விடப்பட்டுள்ளது.


Previous Post Next Post