யாழில் மருத்துவர்கள் பயணம் செய்த கார் வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்து! (படங்கள்)

யாழ்.அரியாலை - மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீட்டு மதிலை மோதித் தள்ளியதுடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது, இது குறித்து அங்கிருந்த மக்கள் கூறுகையில், கட்டுப்பாட்டை இழந்து கார் வீட்டு மதில் மீது மோதி மதில் இடிந்து விழுந்ததுடன் கார் தலைகீழாக கவிழ்ந்தது.

இதனையடுத்து அப்பகுதியால் வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். குறித்த காரில் பயணித்தவர்கள் மருத்துவர்கள் எனவும், சம்பவம் இடம்பெற்று அடுத்த சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சித்தபோதும் இளைஞர்கள் அதற்கு அனுமதிக்காமல் அம்புலன்ஸ் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சம்பவத்தில் எவருக்கும் பாரியளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.


Previous Post Next Post