வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில் களிக்காட்டுப் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 6 ஆம் வட்டாரம் குமுழமுனையினை சேர்ந்த சுப்பிரமணியம் கோபிநாத் (வயது-44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த தூணுடன் மோதுண்டு விபத்துக்கு இலக்காகியுள்ளது.

நேற்று இரவு விபத்து இடம்பெற்றபோதும் இன்று காலையிலேயே விவசாய நடவடிக்கைக்கு சென்ற விவசாயிகளால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி த.கெங்காதரன் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

சடலம் பிரோத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post