யாழில் விபத்து! இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம், கொட்டடி - நாவாந்துறைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று (27) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 31 வயதான நவரட்ணராஜா சங்கீத் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸாரின் தெரிவித்துள்ளனர்.

அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவரும் நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post