போலி விசா மூலம் வெளிநாட்டுப் பயணம்! விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைது!!

பிரித்தானியாவுக்கு போலி விசாவைப் பயன்படுத்தி செல்ல முயன்ற 3 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 மற்றும் 31 வயதுடைய நபர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 3 இலங்கையர்களும் லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் தங்களுடைய குடிவரவு நடைமுறைகளை சரிசெய்வதற்காக விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கவுண்டருக்கு வந்திருந்தனர்.

கடமையில் இருந்த குடிவரவு அதிகாரிகள், அவர்களது பயண ஆவணங்களை ஆய்வு செய்த போது, ​​விசாக்கள் போலியானது என கண்டறிந்தனர்.

இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Previous Post Next Post