மோட்டார் சைக்கிள்-சொகுசு வாகனம் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

மாங்குளம் பகுதியில் சற்று முன் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பிரதான வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள், சொகுசு வாகனம் ஒன்றுடன் மோதியதாலேயே விபத்து நிகழந்துள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்ததுடன், இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post