பிரான்ஸில் மனைவியைக் கொன்ற கணவன்!

இல் து பிரான்ஸ் 92 ஆம் மாவட்டப் பகுதியில் மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியைக் கொன்று விட்டு “நான் எனது மனைவியைக் கொன்று விட்டேன்” என வீதியால் கத்தியவாறு சென்ற நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபருடன் அவரின் வீட்டிற்றுச் சென்ற பொலிஸார், அங்கு குற்றுயிராய்க் கிடந்த அவரின் மனைவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கொலைச் சம்பவம் இடம்பெறும் போது அவர்களின் பிள்ளைகள் இருவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் 53 வயதான ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள தீவைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரின் கையில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடலில் இரத்தக் கறைகள் இருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அண்மைக் காலமாக பிரான்ஸில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post