யாழில் காதலியுடன் முரண்பாடு! வீடியோ அழைப்பெடுத்து நேரலையாக உயிரை மாய்ந்த இளைஞன்!!

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வீடியோ அழைப்பில் காதலியை அழைத்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கு, ஏழாலையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரை மாய்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தனியார் கல்வி நிலைய ஊழியராகக் கடமையாற்றும் குறித்த இளைஞன் 5 வருடமாக யுவதி ஒரு வரை காதலித்து வந்துள்ளார்.

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தொலைபேசியில் வீடியோ அழைப்பை எடுத்தவாறு நேற்று உயிரை மாய்த்துள்ளார்.

மரணம் தொடர்பில் மரண விசாரணையை யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் மேற்கொண்டார்.
Previous Post Next Post