யாழில் திடீரென சுற்றிவளைப்பு! விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் சிறப்புச் சுற்றுக் காவல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வாள்வெட்டு, வழிப்பறிக் கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காகவே இச் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், அரசடிப் பகுதியினை மையமாக வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பாதுகாப்புச் செயலாளர், வட மாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்திருந்தனர். இந்தச் சுற்றுக் காவல் நடவடிக்கைகளில் சில வீடுகளும் சோதனையிடப்பட்டன.

பொலிஸார் இந்த நடவடிக்கையைக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த எனத் தெரிவித்த போதும், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலங்களில் வாள்வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் பொதுமக்கள், பொலிஸார் மீது நம்பிக்கையினை இழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post