யாழில் பிள்ளையிருந்தும் நடு வீதியில் பரிதவிக்கும் தாய்! (படங்கள்)

போக்குவரத்துத் தடை காரணமாக கிளிநொச்சி பரந்தன் பஸ் தரிப்பு நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மா ஒருவர் சுமார் பத்து நாட்களாக தங்கி வாழ்கின்றார்.

கரைச்சி பிரதேச செயலாளரை மேற்கோள் காட்டி சமூக வலைத்தளங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வயது முதிர்ந்த அம்மா யார் என வினவியபோது தான் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கருவாடு விற்பனைக்காக கிளிநொச்சி வந்தபோது போக்குவரத்து தடை செய்யப்பட்ட காரணத்தினால் என்னால் செல்ல முடியவில்லை என்று தெரிவித்தார்.

அந்த வயது முதிர்ந்த அம்மா தன்னை காங்கேசன்துறைக்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்லாமல் தன்னை கைதடியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள் என்று கூறினார்.

ஏன் அம்மா உங்களுக்கு யாரும் இல்லையா என அம்மாவிடம் வினவியபோது , காங்கேசன்துறையில் எனக்கு மகனும் மருமகளும்  இருக்கின்றனர் இருந்தும்  அவர்கள் என்னை சரியாக கவனிப்பதில்லை என கண்கலங்கியபடி கூறினார்.
Previous Post Next Post