நாளை பிரசவம்! இன்று உயிரிழந்த கர்ப்பிணித் தாய்!!


மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை கர்ப்பவதி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த கர்ப்பவதி கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு திங்கட்கிழமை பிரசவ அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த கர்ப்பினி பெண் வயிற்றில் சிசுவுடன் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post