யாழில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இருவரும் போதை பாவித்திருந்தனர்! மருத்துவ பரிசோதனையில் அறிக்கை!!

தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உள்படுத்திய போதும் மதுசாரம் மற்றும் ஐஸ் போதைப்பொருளை பாவித்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை புலோலி சிங்கநகர் பகுதியில் நேற்றிரவு இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பெருநாளான நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி சட்ட மருத்துவ வல்லுநர் க.வாசுதேவா முன்னிலையில் இருவரது சடலமும் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி: 
Previous Post Next Post