யாழில் தொடர்ச்சியாகக் கைது செய்யபடும் இளைஞர்கள்! சிறுவன் ஒருவனும் கைது!!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வைத்து, 5 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் 17 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சிறுவன் நேற்று யாழ். உச்ச நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை அவனை எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை நேற்று 200 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் 22 வயதுடைய இளைஞன் ஒருவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post