யாழிலிருந்து சென்ற ஹயஸ் வாகனம் விபத்து! சுகாதார ஊழியர்கள் பகிஷ்கரிப்பு!! கடமையைப் பொறுப்பேற்ற பாதுகாப்பு ஊழியர்கள்!!! (படங்கள்)

கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் பூநகரி நல்லூர் பகுதியில் உள்ள குறித்த பிரதேசத்தை வரவேற்கும் சீமெந்தினால் கட்டப்பட்ட வளைவுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த 4 பேர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வருகை தந்த போது சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தினால் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வைத்தியரிடம் அழைத்து செல்லும் பணிகளை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சுகாதார ஊழியர்கள் போல் கடமையில் ஈடுபடும் காட்சிகள் எம்மால் அவதானிக்க முடிந்தது

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post