இரு நாட்களில் மூவரை இழந்த பிரதேச செயலகம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!! (படங்கள்)

விபத்து, டெங்கு நோய், தற்கொலை போன்ற காரணங்களினால் பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மூன்று பேர் இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், குறித்த பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் நடராஜா பிறேமவாசன் (வயது -45) என்பவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு! (படங்கள்)இதேவேளை அதே பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றிய விசாகரனத்தினவேல் சுகன்யா கடந்த 22 ஆம் திகதி டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலால் பெண் ஒருவர் உயிரிழப்பு! (படங்கள்)அத்துடன் பளை பிரதேச செயலகத்தில் நிர்வாகக் கிளையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றிய ரவிச்சந்திரன் ரிதுஷன் முரசுமோட்டையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அரசங்க உத்தியோகத்தர்! (படங்கள்)

ஒரே அலுவலகத்தில் பணியாற்றி மூன்று உத்தியோகத்தர்கள் இரு நாட்களில் உயிரிழந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post